உரிமம் புதுப்பிக்க அறிவுறுத்திய 1வது மண்டல சுகாதார அலுவலர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

உரிமம் புதுப்பிக்க அறிவுறுத்திய 1வது மண்டல சுகாதார அலுவலர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வணிகக் கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்க அறிவுறுத்திய ஒன்றாவது மண்டல சுகாதார அலுவலர்  சிவகுமார் அறிவுறுத்தல், வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட சிறு கடைகள் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன.

இதனையடுத்து நடப்பாண்டிற்கான கடைகள் உரிமம் புதுப்பித்தல் குறித்து வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அதற்கானவிண்ணப்பங்கள் மற்றும் நோட்டீஸினை விநியோகம் செய்து கடை உரிமையாளர்களிடம் உடனடியாக உரிமம் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறித்தினார்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.

No comments:

Post a Comment

Post Top Ad