மேலும் இதே போல் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிருவன ஊழியரான சினிவாசன் என்பவரது செல்போனில் டெலிகிராம் செயலியின் மூலம் வந்த ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற லிங்கினை செடக்கியதன் மூலம் ரூபாய் 20,000/- பணம் அவரது வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா அவர்கள் வழக்கு பதிவு செய்து துரிய நடவடிக்கையின் மூலம் விக்னேஷ் மற்றும் சீனிவாசன் இழந்த மொத்த பணம் ரூபாய் 2,20,000/- மீட்கப்பட்டு 212.02.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்து இனிவரும் காலங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குருஞ்செய்திக்கோ, மின்னஞ்சலுக்கோ, தொலைபேசி அழைப்புகளுக்கோ அல்லது லிங்க்குகளுக்கோ அதன் உண்மைத் தன்மையை அறியாமல் பயன்படுத்தவோ மற்றும் விபரங்களை தெரிவிக்கவோ கூடாது என அறிவுரை வழங்கினார். இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment