விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் ஊர்வலம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாபெரும் ஊர்வலம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று 11-2-2024 குடியாத்தம் ஒன்றிய தமிழகம் வெற்றி கழகம் தலைவர் கள்ளுா் மு கலைச்செல்வன் தலைமையில் காந்தி சிலை பெரியார் சிலை காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.

பிறகு புதிய பஸ் நிலையம் அருகில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய நிர்வாகிகள் நாகலிங்கம் விஸ்வநாதன் குமரேசன் ராஜேஷ் உதயகுமார் தினேஷ் குமார் மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் தாமோதரன் நவீன் குமார் ராஜராஜ சோழன் கௌதம் நிதிஷ்குமார் தினேஷ் பாபு நிர்மல் மகேந்திரன் கரிகாலன் பிரபு நாத் ஏழுமலை சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad