கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சின்னட்டி கிராமத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை சிறைவாசி சி.சீனிவாசன் (வயது 55), த.பெ.சின்னபுட்டி, என்பவர் வேலூர் மத்திய சிறையிலிருந்து 17 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு இன்று முன்விடுதலை செய்யப்பட்டார் .
அவருக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் மளிகை பொருட்கள் அரிசி பருப்பு, புளி கடலை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன, வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜயராகவலு, தலைமை தாங்கினார்.
முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எ.எஸ்.அப்துல் ரஹ்மான் வழங்கினார். செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் அரிசி பருப்பு, உப்பு புளி மிளகாய், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது உதவி சிறை அலுவலர் ஆர்.துரை உடன் இருந்தார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment