முற்போக்கு எழுத்தாளர்களின் நூல் அறிமுக விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

முற்போக்கு எழுத்தாளர்களின் நூல் அறிமுக விழா.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சலைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்டக்குழுவின் சார்பில் முற்போக்கு எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுக விழா இன்று வேலூர் மாவட்ட இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க அலுவலகமான சரோஜ் இல்லத்தில் மாலையில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட செயலளர் எஸ்.சுரேந்திரன் தலைமை தாங்கினார்.  முன்னதாக கவிஞர் முல்லை வாசன் வரவேற்று பேசினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், எழுத்தாளர்கள் ஆர்.பாபு, மின் வாரிய ஓய்வூதியர் கு.தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.


முல்லைவாசன் கவிதைகள் என்ற நூலினை அறிமுகம் செய்து ஓய்வுபெற்ற மாவட்ட கணக்கு அலுவலர் முத்து.சிலுப்பன் பேசினார்.  போன்சாய் கவிதைகள் என்ற நூலினை அறிமுகம் செய்து டி.நேதாஜி, இரா.சுடர்கொடி பேசினர்.  கவிஞர் இளையவன் எழுதிய எதிர்காற்று மிதிவண்டி என்ற நூலினை அறிமுகம் செய்து வைத்து இரா.சண்முகானந்தம் பேசினார்.  முதல் பிரதியினை முத்து.சிலுப்பன், செ.நா.ஜனார்த்தனன், இரா.சுடர்கொடி, ஶ்ரீராம், பழனி ஆகியோர்  உள்பட பலர் பெற்றுக்கொண்டனர்.


நூலாசிரியர் மறைந்த எழுத்தாளர் க.ராமஜெயம் என்கிற இளையவன் அவர்களின் மனைவி எஸ்.மரகதம், கவிஞர் முல்லைவாசன், கவிஞர் சகுவரதன் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.  


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad