குடியாத்தம் பேரணாம்பட்டு வட்டங்களில் மக்களுடன் முதல்வர் நல திட்ட விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 6 February 2024

குடியாத்தம் பேரணாம்பட்டு வட்டங்களில் மக்களுடன் முதல்வர் நல திட்ட விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் நல திட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி நல்ல திட்டங்களை வழங்கினார்.

வருவாய் கோட்டாட்சியர் மு.வெங்கட்ராமன், வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 36 வார்டுகள் உள்ள பொதுமக்களிடம் சுமார் 5000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இம்மணுக்களை 13 துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன்  குடியாத்தம் நகராட்சி கமிஷ்னர் மங்கையர்க்கரசன் ஒன்றிய பெருந்தலைவர் என்.இ.சத்யானந்தம், பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனம் குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் ஏழு நபர்களுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், வீல் சேர், மின்சாரத் துறையில் பெயர் மாற்றம் புதிய மின் இணைப்புகள், தையல் இயந்திரங்கள் சலவை பெட்டிகள் வேளாண் கருவிகள் ஓய்வு ஊதியம் குடும்ப அட்டை வீட்டுமனை பட்டாக்கள் போன்றவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன, இறுதியில் வட்டாட்சியர் சித்ராதேவி நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad