வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சி சார்பில் மக்களை தேடி மருத்துவம் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ .சி. எஸ். சண்முகம் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு மக்களை தேடி மருத்துவம், குடியாத்தம் நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் பிரம்மா செந்தில் முன்னிலையில் கண் காது மூக்கு தொண்டை மற்றும் பொதுமக்களுக்கு அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் புதிய நீதி கட்சி பொறுப்பாளர்கள் வெங்கடேசன் சத்தியமூர்த்தி சண்முகம் சுதாகர் வேலு பிரபுராஜ் விக்கி அன்பு ரஜினி சுதாகர் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர் இம் முகாம் குடியாத்தம் பலமனேர் செல்லும் சாலைஅரச மரம் அருகில் எம். எஸ். மஹால் திருமண மண்டபத்தில் 04:02:2024 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது இம் முகாமில் பொது மக்களுக்குதினசரி காலண்டர் மதிய உணவு வழங்கி அனுப்பி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment