வேலூரிலிருந்து அணைக்கட்டு போகும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஊசூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வாழும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒதுக்குவது என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பெரும் மோசடி நடந்துள்ளதால் கொதிப்படைந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் ஊசூர் அணைக்கட்டு சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இலவச வீட்டுமனை பட்டா தில்லு முல்லுகளை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் கோட்டி (எ) கோவேந்தன் அவரிடம் பேசியபோது வேலூர் ஒன்றியம் ஊசூர் ஊராட்சியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட துறை மூலம் இப்பகுதி ஆதிதிராவிட மக்கள் சுமார் 70 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர் நில சம்பந்தமாக நீதிமன்றம் போன காரணத்தால் மனை பட்டா வழங்குவது தடைபட்டது இருந்தும் 23 ஆண்டுகால நீதிமன்ற போராட்டங்களுக்கு பிறகு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்நிலையில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட அந்த நிலத்தில் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதற்கான பணிகளை ஆதிதிராவிட நலத்துறை செய்துவரும் வேலையில் இந்த ஊராட்சியின் தலைவர் விஜயகுமாரி என்பவரின் கணவர் கண்ணன் இலவச வீட்டுமனை பட்டா பெறவுள்ள பயனாளிகளிடம் ரூபாய் 20 ஆயிரம் கொடுப்பவர்களுக்குதான் இலவச வீட்டுமனை பட்டா என்று சொல்லி பணத்தை வசூலித்து வருகிறார். பணம் கொடுக்க மறுக்கும் பயனாளிகளுக்கு மனை பட்டா கிடைக்காது என மிரட்டியும் வருகிறார்.
இந்த இலவச வீட்டுமனை பட்டா விவகாரத்தில் ஒரு பட்டாவிற்கு ரூபாய் 20 ஆயிரம் வசூலிப்பதாக மோசடி புகாருக்கு உள்ளாகியிருக்கும் கண்ணன் (எ)செல்வகுமார் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரியின் கணவர்ஆவார். ஊராட்சி மன்ற கூட்டம் நடத்துவது. தலைவர் சீட்டில் அமர்வது உறுப்பினர்களிடம் செயல்படுத்தபோகும் பணிகள் குறித்து விவாதிப்பது வேண்டியவர்களுக்கு மட்டுமே காண்ட்ராக்ட் பணி ஒதுக்குவது. சில சமயங்களில் தலைவர் கையெழுத்து இடவேண்டிய கோப்புகளில் இவரே கையெழுத்திடுவது உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் இவரே செய்துவருகிறார். பெயரளவிற்கு மாத்திரமே விஜயகுமாரி தலைவராக இருக்கிறார் என்றார்.
கண்ணன் (எ)செல்வகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரின் வலது கை என கூறிக்கொண்டு அரச வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் ஆட்டை போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ரியல் எஸ்டேட் விவகாரங்களில் ஏகப்பட்ட வில்லங்கதனத்தை காட்டி கோடிகளை ஆட்டை போட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது எனவே மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த வீட்டுமனை விவகாரத்தை கொண்டுவருகிறோம். இதில் மனை பட்டா வழங்க பணம் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தால் கட்சிகளை கடந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment