வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், வீரி செட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கடந்த 8ஆம் தேதி மாலை 7-30 மணி அளவில் குடியாத்தம் பரதராமி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வீரசெட்டிபள்ளி அருகே வழியில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது மோதியதில் மேற்படி லட்சுமணன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார். மேற்படி நபருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இச்சம்பவம் குறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment