பேரிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் 34ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா விஸ்வகர்மா சமூகத்தினரின் நான்காம் நாள் உற்சவம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 February 2024

பேரிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் 34ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா விஸ்வகர்மா சமூகத்தினரின் நான்காம் நாள் உற்சவம்.


வேலூர் மாவட்டம் பேரிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் 34ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா விஸ்வகர்மா சமூகத்தினரின் நான்காம் நாள் உற்சவம் இன்று நான்காம் நாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 


நான்காம் நாள் உற்சவ உபயதாரர்கள் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி, துணைத்தலவர் எல்.பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர் வி.துரைசாமி, வி..டி.என்.மார்கபந்து, வி.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்னன், தலைமை நிலைய செயலாளர் சு.சோமாஸ்கந்தன், செயற்குழு உறுப்பினர் தி.சு,சக்ரீஸ்வரன், வே.பஞ்சாட்சரம், கே.ஜி.சண்முகம் ஆச்சாரி, மூர்த்தி, எம்.நாகராஜன், கோ.சுவாமிநாதன், தாமோதரன், செல்வி, முரளிதரன், த.கனகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


காலை கேடைய உற்சவம் நடைபெற்றது. மாலை நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் வி.என்.ஷண்முக குருக்கள், உமாபதி குருக்கள், ஆகியோர் பூஜைகள் செய்தனர்.  டி.எஸ்.கணேசன் குழுவினரின் நாதசுரம் கச்சேரி நடைபெற்றது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad