வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் ஏ.கே.கிருஷ்ணசுவாமி தலைமையில், நிர்வாக அலுவலர் கே.மலர்விழி முன்னிலையில், பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி ஆலோசனையில் வேலூர் மாவட்ட புகையிலை தடுப்புப்பிரிவு மருத்துவ அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் வட்டார பொறுப்பாளர் ஆகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு புகைபிடித்தல் மற்றும் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆனந்தி, அகிலா சசிகுமார் ஆகியோர் செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment