காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 February 2024

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


கடந்த 2018 - 2019 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வருமான வரி கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்ததற்காக  காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி இந்திய வரலாற்றில் இல்லாதவாறுரூ.210 கோடி அபராதம் விதித்த பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய வருமானவரித் துறையை கண்டித்தும் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (19.02.2024) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் பேர்ணாம்பட்டு BSNL அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நிகழ்விற்கு பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான G.முஜம்மில் அஹமத் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முனுசாமி, சக்கரவர்த்தி, சரவணன், பாஸ்கரன், MD.ராகிப், ஆனந்தவேல், உவைஸ் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் திருமதி.தேவகிராணி ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாவட்ட‌ காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் திரு.G.சுரேஷ்குமார் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். மாநில பேச்சாளர் நாட்டாம்கார். அப்துல் அக்பர், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சா.சங்கர், M.வீராங்கன், பெரியசாமி  மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹிர், மாவட்ட சமூக ஊடகப் பிரிவு தலைவர் யுவராஜ், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் காத்தவராயன், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் காளியப்பன் மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் பெரிய தம்பி, பழனிவேல், ஃபயாஸ், ரஜினி, ரியான்,  சல்மான், கோவிந்தசாமி, முகம்மது ரஃபி, ரபீக் ,அத்தியூர், ரஹ்மான், வசிம்,துபேல், தல்ஹா, அத்தர், மணிவண்ணன், இம்தியாஸ், சுஃப்யான், முஸாகிர், பயாஸ், முக்தியார், சக்திவேல், சதீஷ், நாகேஸ்வரன், ராமு, ஷமீல், வீரபாண்டியன், சீனிவாசன், அப்பாஸ், முருகன், மோகன், மீசை முருகன், முனுசாமி, சின்னராஜ், விஜயகுமார், நிதிஷ், வெங்கடேசன், கனகராஜ், இளமாறன், ஷர்மா, சத்தியன், அதியமான், ஜானகிராமன், வெங்கடேசன், குத்தூஸ், பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் விஜயேந்திரன் நன்றியுரை கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad