2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து குடியாத்தம் மேல் ஆலத்தூர் சாலையில் உள்ள நேரு பூங்காவில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அண்ணல் தங்கோ உருவ சிலை அமைக்கப்பட்டது. காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்த சிலைக்கு மாவட்ட வருவாய் துறை அலுவலர் மாலதி அவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன், ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம், குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, நகர மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் தியாகி அண்ணல் தங்கோ அவருடைய குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment