வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளர். வேலூர் மாவட்டம் காட்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் மிதிலேஷ் குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுது பாதுகாப்பாகவும் ஹெல்மெட் அணிலும் செல்ல வேண்டும் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது.
பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அவர் வழங்கிய அறிவுரைகளை கேட்டனர் இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரர் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் இந்த விழிப்புணரில் கலந்து கொண்டனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

No comments:
Post a Comment