குடியாத்தம் கிருஷ்ணசுவாமி பள்ளி யோகா பயிற்சி முகாம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

குடியாத்தம் கிருஷ்ணசுவாமி பள்ளி யோகா பயிற்சி முகாம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு இறுதி யோகா ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் அருகே உள்ள தீர்த்தமலை அடிவாரத்தில் நடைபெற்றது. முன்னதாக மாணவ, மாணவியர் அடங்கிய பள்ளி பேருந்துகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஏ.கே. கிருஷ்ணசுவாமி, நிர்வாக அலுவலர் கே.மலர்விழி ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பினர். 

பள்ளி முதல்வர் எம்.ஆர்.மணி தலைமையில், முகூர்த்தம் அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருத்திகா, லில்லி, சுப்பிரமணி முன்னிலையில், யோகா பயிற்சியில் முதுகலை பட்டம் பெற்ற பள்ளியின் அறிவியல் ஆசிரியை செளபாலா, யோகா பயிற்சி அளித்து பயன்களை விளக்கினார். பயிற்சிக்குப்பின் சத்துமாவு கஞ்சி, பழவகைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 


பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டு மாணவ, மாணவியரின் தனி நடிப்பு, விடுகதை, நடனம், சிரிக்கவைக்கும் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர்கள் ரேவதி, கவிதா, உஷா, வரலட்சுமி, அகிலா, சசிகுமார் ஆகியோர் செய்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad