வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லட்சுமணாம்புரத்திலிருந்து தட்டப்பாறைக்கு செல்லும் வழியில் முட் புதர் அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் இதை அடுத்து போலீசார் அந்த இரண்டு நபர்களையும் தீவிர விசாரணை செய்தனர் அப்போது இரண்டு நபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் அதிகமானது.
இதை அடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர் அதில் சேங்குன்றம் பகுதியை சேர்ந்த கோகுல் குமார் வயது 26 ஐயப்பன் வயது 21 என்பதும் இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வந்தது இதை அடுத்து முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment