பேரணாம்பட்டு வட்டம் மற்றும் உள்வட்டம் குண்டலபள்ளி கிராமத்தில் ஐ .இ .எல் .சி துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் அருகில் உள்ள காட்டாமணி செடியில் உள்ள காய்களை கடந்த 15.02.2023 அன்று மாலை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பள்ளி மாணவர்கள் எட்டு நபர்களையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் விவரம்:
- சுமித்ரா த/பெ நெல்சன் (வயது 8).
- தியா நான்சி த/பெ பெஞ்ஐமின் (வயது 8),
- ரியா மன்சி த/பெ பெஞ்ஐமின் (வயது 6),
- ஐபேஷ் ஜெய்கன் ராஜ் த/பெ நித்யராஜ் (வயது10)
- ராபேல் த/பெ நித்யராஜ் (வயது 8)
- ஜெசி ஜெரினா த/பெ (வயது 7),
- கீர்த்தனா த/பெ பார்த்திபன் (வயது 11),
- பிரபாகரன் த/பெ பார்த்திபன் (வயது 8)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நல்ல நிலையில் உள்ளார் என விசாரணையில் தெரிய வருகிறது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
- செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment