வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் விரோத விடியா திமுக அரசை கண்டித்து தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் இன்று (15.2.24) வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் தாழையாத்தம் எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் T.சிவா, மாயா பாஸ்கர், அணைக்கட்டு ஒன்றிய கழக செயலாளர் ஆனந்தன், காடை G.P. மூர்த்தி, A.ரவிச்சந்திரன், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, S.N. சுந்தரேசன்,V.N. தனஞ்செயன், ரித்தீஷ், நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், M.ரேவதி மோகன், A. தண்டபாணி 34 வது வார்டு கழகச செயலாளர் (பொ) ஜுஸ் சேகர்* ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தின் தொடக்கமாக பொறிக்கடை பாலாஜி, G.S. தென்றல் குட்டி ஆகியோர் கண்டன பிரச்சார உரையை நிகழ்த்தினர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கினார். கழக பேச்சாளர் சிட்கோ சீனு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள், b சார்பணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment