வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராஜாகோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைவர் வே.இரா.சுப்புலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி முன்னிலை வகித்தார். முகாமில், இலவச வீட்டு மனை பட்டா, உட்பிரிவு பட்டா மாற்றம், விதவை உதவி தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, சலவைப் பெட்டி, தையல் எந்திரம், வேளாண் கருவிகள், தாய் சேய் நல பெட்டகம் உள்பட ரூ.9 கோடியே 43 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை 131 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார்.
ஒன்றிய பெருந்தலைவர் என்.இ.சத்தியானந்தம், நகர மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் இமகிரி பாபு, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் பலராம பாஸ்கர், மேற்கு வருவாய் ஆய்வாளர் புகழரசன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், சசிகுமார், உஷா மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முடிவில், வட்டாட்சியர் சித்ராதேவி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment