வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியராக புதியதாக பொறுப்பேற்றுள்ள சரணவணன் அவர்களை காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் அவைத்தலைவைர் செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி, அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் ஆங்கில புத்தாண்டு காலண்டர் வழங்கி பேசினர். காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயல்பாடுகள் பாராட்டுதலுக்குரியது தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்தார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment