மேலும் சிலைகளை அமைக்க மாற்று இடம் குறித்து அதிமுக மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முயற்சி செய்ததாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகள் சாலை விரிவாக்க பணிகளுக்காகஅகற்றப்படும் சிலைகளை அமைக்க மாற்று இடம் கொடுத்துவிட்டு அப்புறப்படுத்தும் மாறும் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது சிலைகள் அகற்றக் கூடாது. எனவும் கூறினார்கள் இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
இறுதியில் மேலாளத்தூர் சாலையில் உள்ள பிரபல சினிமாதியேட்டர் எதிரில் சிலையை அமைக்க பேச்சுவார்த்தை மூலம் சமூகம் மேற்பட்டது ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் கவிதா குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி நகர கழக அதிமுக செயலாளர் ஜே கே என் பழனி மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆர் கே அன்பு எஸ் என் சுந்தரேசன் வி. இ கருணா நகர மனற உறுப்பினர்கள் மனோஜ் கவிதா பாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment