கே.எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.செந்திராஜ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.நேதாஜி வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனையின் மனநல மருத்துவர் திரு.சிவாஜி ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ஆற்றிய உரையில் பள்ளி மாணவர்கள் உடல் நலம் மற்றும் மனநலன் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் பள்ளி மாணவர்கள் கூல் லிப்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நலம் பாதிப்புகள் மற்றும் மனநலம் பாதிப்புகளிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும். என்பதை மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இக்கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.
பள்ளியின் ஆசிரியர்கள் தமிழ் திருமால் கேசவன் பலராமன் சிவராமன் அலுவலக உதவியாளர் ஞானபிரகாசம் ஆகியோர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர், கருத்தரங்க முடிவில் செஞ்சுருள் சங்க உறுப்பினர் முனைவர் எஸ். செல்வராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment