வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் R ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு மஞ்சள் கைப்பை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். இறுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஜினி நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment