இந்நிலையில், கடந்த 10.02.2024 இரவு 10:00 மணியளவில் வீட்டில் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். மனைவி நீங்கள் ஏற்கனவே குடித்து விட்டிருக்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. உடனே ஆட்டோ ஓட்டுனர் தினேஷ் எனக்கு குடிப்பதற்கு பணம் இல்லையா நான் உன்னுடன் வாழமாட்டேன் என்று கூறி ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து தனக்கு தானே ஊற்றி வைத்துக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து முதல் உதவிக்காக வேலூர் அரசு மருத் துவ மனைக்கு 108 ஆம்பு லன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் (கே.எம்.சி) மருத்துவம்னைக்கு எடுத்து செல்லுமாறு கூறினர். அதனைத் தொடர்ந்து உடனடியாக சென்னை கீழ்ப்பக்கம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் 14.02.2024 அதிகாலை 5:45 மணி அளவில் தினேஷ் இறந்து விட்டதாக சிகிச்சை அளித்த டாக் டர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இறந்த தினேஷின் அம்மா பேபி காட்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாலவெங்கட்ராமிடம் புகார் அளித்தார். புகார் அடிபடையில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது குடிப் பதற்கு பணம் கேட்டு கொடுக்கதால் ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டார்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:
Post a Comment