குடியாத்தம் அருகே புதிய SAARA பல் மருத்துவமனை திறப்பு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

குடியாத்தம் அருகே புதிய SAARA பல் மருத்துவமனை திறப்பு விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் G P M தெரு சாரா பல் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்வி நிறுவனம் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

பல் மருத்துவர் ரம்யா அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியில் கம்பன் கழக நிறுவனர் ஜே கே என் பழனி மு அரசு வழக்கறிஞர் கே எம் பூபதி குடியாத்தம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மாவட்ட தலைமை மருத்துவர் எம் மாறன் பாபு நகர மன்ற உறுப்பினர் ஆர் கே அன்பு சென்னை வணிகவரித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் எஸ் சீனிவாசன் அடுக்கம்பாறை மருத்துவமனை மருந்தாளர் ஜி ரவி திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மலர்கொடி விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad