தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 February 2024

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தம்


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இந்திய வேலை நிறுத்தம் மாலை நேர தர்மா வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.


மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய உழைப்பாளி மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து மக்களும் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் சொத்தை தனியாருக்கு விற்பது என்ற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 


ஆண்டுதோறும் இந்திய உழைப்பாளி மக்கள் இந்த கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர் 2024 பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்க, ஜனநாயக அமைப்புகளும் முடிவு செய்துள்ளது.


ஜனவரி 13 அன்று நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு அனைத்து மாநிலங்களிலும் இந்த வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் தொடர்ந்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு 16/02/2024ல் மாலை நேர தர்ணா போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டது.


அதன் அடிப்படையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும் மாலை நேர தர்ணா போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார்,  மாவட்ட இணை செயலாளர் விஜய் மகேஸ்வரி வரவேற்று பேசினார் மாவட்ட செயலாளர் அ. சேகர் தர்ணா போராட்ட விளக்க உரையாற்றினார் தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பா ரவி போராட்டத்தை துவக்கி வைத்தார்.


இந்தியா ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் மா சினேகலதா தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ சீனிவாசன் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம் எஸ் தீனதயாளன், பா வேலு வி ரமேஷ் வேளாண்மை துறை கா பாலமுருகன் மருந்தாளுனர் சங்க வேந்தன் ஜி வில்வநாதன் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா சா ஆனந்தகுமார் ஆகியோர் போராட்ட உரையாற்றுகின்றனர்.


முடிவில் தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி கிருஷ்ணமூர்த்தி நிறைவுறையாற்றுகிறார் முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறுகிறார்.


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்து!

ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையை கைவிடுக!

அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்து!

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே !

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து! புதிய கல்விக் கொள்கையை கைவிடுக!


மாவட்டச்செயலாளர் அ.சேகர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இந்த பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு செ. நா. ஜனார்த்தனன் நன்றி கூறினார்



- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad