கொடிய நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவிய சமூக ஆர்வலர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 February 2024

கொடிய நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி உதவிய சமூக ஆர்வலர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டை கிராமத்தில் SLE எனப்படும் கொடிய நோயால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் அதற்கு சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எளிய குடும்ப பின்னனி கொண்ட வள்ளியின் கணவருக்கு முதலில் SLE நோய் தொற்ற பிறகு மகனுக்கு பாதித்து இரு கண்களும் செயலிழந்து 27 முறை அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றுள்ளது.

தற்போது மகளுக்கும் நோய் தாக்கியுள்ளது. மூன்று பேரும் மாதம் மாதம் மருந்து மாத்திரைகள் வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை  இல்லையேல் உடல் உறுப்புக்கள் பாத்திக்கபட்டு உயிருக்கு ஆபத்தாகும். மாதம் 5000 வரை செலவு செய்ய போதிய வருமானம் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய சொல்லி கண்ணீர் விட்ட  தாய்.


இவருக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளுக்கு பண உதவி ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது . அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த குடும்பத்தினருக்கு உடனடியாக அரசு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad