விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 February 2024

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையமே  நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்து விடுதலை சிறுத்தை கட்சியின்  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் க.கோட்டி என்கிற கோவேந்தன், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ம.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் அ. இளங்கோ வரவேற்புரையாற்றினார். 


கண்டன ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் மாநில அமைப்பு செயலாளர் நீல. சந்திரகுமார், வி.சி.க. திமுக அவை தலைவர் தி.அ. முகமது சகி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீக்காராமன், விசிக வேலூர் நாடாளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் எஸ். தயாநிதி, மதிமுக மாவட்ட செயலாளர் ஜி. கோபி, திமுக மாநில தலைவர் ஜி.எஸ்.இக்பால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில செய்தி தொடர்பாளர் மண்டல செயலாளர் இரா. சுபாஷ் சந்திரபோஸ், மண்டல துணைச் செயலாளர் வேதாச்சலம் என்கிற மறைமலை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எஸ்.பிரேம்குமார், அப்பு என்கின்ற வெங்கடேசன், மாவட்டத்துணைச்செயலாளர் (இ.சி.ஏ.பா) செய்தி தொடர்பாளர் கா.அ. நாகராஜ், காகிதபட்டரை சரவணன், காட்பாடி இன்பராஜ், 4ஆம் பகுதி செயலாளர் ரபேல் பிரபுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad