வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, பொதுமக்களுக்கு திட்டங்கள் எவ்வாறு சென்றடைகின்றன குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், குழுவின் உறுப்பினர் சுப்புலட்சுமி அவர்கள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு அவர்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா அவர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒன்றியக்குழு தலைவர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment