வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜா கோவில் அருகில் உள்ள R D G திருமணம் மண்டபத்தில் கம்மவாா் வேலூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் T N ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சுகுமார் சிவகுமார் முன்னிலை வகித்தனர். T C ஜெகநாதன் வரவேற்றார், ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தா முகாமை துவக்கி வைத்தார்.
இதில் கண் உரை நீக்குதல் கண்ணில் சதை வளர்த்தல் கிட்டப்பார்வை தூர பார்வை என பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 475 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது இவர்களில் முதல் கட்டமாக 68 பேர் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் குறைந்த விலையில் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
முகாமில் முரளி சுரேஷ் முகாம் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மருத்துவ அலுவலர் சிவகுமார் மருத்துவர் ரஷீத் யாசர் செவிலியர்கள் குடியாத்தம் பாலாறு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment