மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் தெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மேற்பார்வையில் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்த நிலிையல் இன்று 20.02.2024 பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரனை செய்ததில் அவர் ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு (வ/24) த/பெ அனுமந்த ராயுடு, வர்ணி கிராமம் என்பதும் இவரே கடந்த 13.02.2024 அன்று 08 மடிக்கணிணிகளை திருடியதும் தெரியவந்தது. மேற்படி விசாரனை செய்து எதிரியிடமிருந்து சுமார் 6,00,000 ரூபாய் மதிப்புடைய 12 மடிக்கணிணிகள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்.

No comments:
Post a Comment