தமிழ்நாடு பட்ஜெட் வரவேற்பும் எதிர்பார்பும். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 February 2024

தமிழ்நாடு பட்ஜெட் வரவேற்பும் எதிர்பார்பும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பல்வேறு வரவேற்க தக்க அம்சங்கள் உள்ள நிலையில் சில எதிர்பார்புகளும் உள்ளன என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுமைப் பெண் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்படும். என்றும்  தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு உதவி பெறும் மாணவர்களும் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்றும் ரூபாய் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கப்படும் திட்டங்களாகும் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் சார்பில் உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டுமென கோரிக்கையினை ஏற்று நடைமுறைபடுத்தப்படும் என்ற அறிவிப்பினை வரவேற்கின்றோம். 

 

மேலும் அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வி சேர்க்கையை உயர்ந்திடும் வகையில் தமிழ் புதல்வன் என்னும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது. “தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். என்ற அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பெறும் மாணவர் எண்ணிக்கை மேலும் உயரும் இதன் மூலம் அதிகமான மாணவர்கள் உயர்கல்வி பெறுவர் இத்திட்டத்தினை வரவேற்கின்றோம்.


ஆனால் மேல்நிலைப்பள்ளிகளில் தெழிற்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடங்களை அறிமுகம் செய்திட வேண்டுகின்றோம்.  மேலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அழைத்து பேசியதன் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்படும், முடக்கப்பட்டுள்ள ஈட்டியவிடுப்பு சரண் செய்து பணமாக்கும் நடைமுறை மீண்டும் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து எதிர்பார்புகளுடன் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பு வரும் என எதிர்பார்கின்றோம். 


அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்  தெரிவித்தார்.




வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad