வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ஜிட்டபல்லி மதுரா புதிய இருளர் பட்டியில் வசித்து வந்த இருளர் வகுப்பைச் சேர்ந்த கண்னுக்கான் மகன் சீனு (வயது 46) மற்றும் சின்னசாமி மகன் உத்திரன் இருவரும் தகராறு செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் இதில் சீனு என்பவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து காயம் அடைந்து இறந்துள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து கிராமிய காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட நபர் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேற்படி இறந்த நபருக்கு உஷா என்ற மனைவியும் தனலட்சுமி தனா வசந்தி என்ற மூன்று மகளும் தனபால் என்ற மகனும் உள்ளார் அனைவருக்கும் திருமணம் ஆகி தனியே வசித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment