வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் வயது 42 த / பெ கிருபாகரன் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை ரஞ்சித் குமார் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நண்பர் சிவகுமார் என்பவருடன் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அப்போது நேதாஜி சவுக் அருகே வரும்போது லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இறந்த ரஞ்சித் குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். தகவல் கிடைத்தவுடன் குடியாத்தம் நகர போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடன் சென்ற சிவகுமார் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்த அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment