வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரும் மாவட்ட இணை செயலாளருமான வெங்கடேசன் தலைமை தாங்கினார். வட்டக் கிளை தலைவர் பிரகாசம் முன்னிலை வகித்தார்.
உடன் இணை செயலாளர் எழிலரசி துணைத் தலைவர் ஸ்ரீதர் தினேஷ் அஜய் சரஸ்வதி அன்னக்கிளி அம்சா அனிதா ஜான்சி உள்பட வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது மீண்டும் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் தெரிவித்தார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment