வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகோபால் நகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ பெரும்புலர் ஈஸ்வரர் உடன் சௌந்தரநாயகி அம்பாள் கோவில் 6ஆம்ஆண்டு கும்பாபிஷேக விழா முன்னிட்டு அபிஷேகம் ஆராதனையம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகிகள் ஏ தணிகைவேல் ஜே சுரேஷ் எல் வெங்கடேசன் எஸ் சந்திரன் நடராஜ் கலைஞர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஜி விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணை தலைவர் ஆர் அண்ணாமலை ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு ஆகியோர் கலந்து கொண்டு 101 கண்பார்வை இல்லாதவர்களுக்கு ₹ 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஆன்மீக பக்த பக்த கோடிகள் ஊர் பெரியவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment