சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில், திமுக கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில, மாவட்ட, மாநகர தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பெற்றது.
திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், D.M.கதிர் ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் செங்குட்டுவன் அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மார்ச் 1, கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் கே.தினகரன், ஏ.ஆர்.டி.உதயசூரியன், டாக்டர்.விஷ்ணு பிரபு, எஸ்.ராம்குமார், மாவட்ட, மாநகர தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment