மாவட்ட பொருளாளர் வீரா.குமரன் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கே விஸ்வநாதன் மாவட்ட இணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து சிலுப்பன், பா. ராஜேந்திரன் ப. சேகர், சா.குமரன், பெ.ராமு, இளவழகன், உள்ளிட்ட பலர் பேசினர்.
பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28ஆம் தேதி வேலூர் மாவட்ட அளவில் பள்ளி கல்லூரிகளோடு இணைந்து கட்டுரை போட்டி கருத்தரங்கம் உள்ளிட்டவற்றை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் இதுதான்: 2024 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் "நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல்". உலகளாவிய சவால்களைச் சமாளித்து, அனைவருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கியப் பங்கை இந்தத் தீம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் குமரன் நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment