வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை 1வது சிவகாமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த யோகராஜ் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
தமிழ் செல்விக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது வேதனை தாங்க முடியாமல் அவதிப்பட்ட தமிழ்ச்செல்வி வீட்டின் மேல் கூரையில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நகர போலீசார் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதை குறித்து கணவர் யோகராஜ் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment