ரோட்டரி சங்கம் காவல்துறை இணைந்து விபத்தில் இல்லா பயணம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

ரோட்டரி சங்கம் காவல்துறை இணைந்து விபத்தில் இல்லா பயணம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் குடியாத்தம் நகர காவல் துறை மற்றும் நகர போக்குவரத்து காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு  மாதம் முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விபத்தில்லா பயணம் மேற்கொள்ள ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் பயிற்சி வகுப்பு இன்று 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் ரோட்டரி சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்றனர் இந்நிகழ்வில் வேலூர் விஐடி பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர்  வி.சரவணன் அவர்கள் யோகா வகுப்பை மேற்கொண்டார் என் எல் பி மாஸ்டர் ஆசிரியர் பரசுராமன் அவர்கள் மன நல பயிற்சி மேற்கொண்டார்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நகர காவல் துறை ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முகேஷ் குமார் துணை ஆய்வாளர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் Rtn.K.M.ராஜேந்திரன், சங்க பொருளாளர், Rtn.PP.AJ.A. கார்த்திகேயன், Rtn.K.சந்திரன், முன்னாள் தலைவர்கள் PP.R.K.மகாலிங்கம், Rtn. PP. C. K. வெங்கடேசன், Rtn.PP.Er.R.அன்பு, Rtn.பாலமுருகன், Rtn.periya. கோடீஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

 

- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad