வேலூர் மாவட்டம் பொன்னை சுற்றுவட்டாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரும்பாலானோர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பு என்பது அவர்களது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்த நிலையில் பொன்னை சுற்றுவட்டார கிராமங்களில் வளர்க்கப்பட்டு வரும் சில கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
நோய் பாதித்துள்ள கால்நடைகள் தீவனம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் சோர்ந்து காணப்படுகின்றன. வாயில் நுரை தள்ளியபடி அவதிப்பட்டு வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் கடும் வேதனை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள்கூறுகையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதித்துள்ளதாக தெரிகிறது இதனால் பால் கறப்பு நடக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயால் பாதித்துள்ள கால்நடைகளால் மற்ற கால்நடைகளுக்கு காற்றும் மற்றும் தண்ணீரால் நோய் பரவ வாய்ப்புகள் உள்ளது.
எனவே கால்நடைத்துறை மருத்துவ குழுவினர் நோய்க்குறிப்பு கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மருத்துவ முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்


No comments:
Post a Comment