வேளாண் உதவி இயக்குனர் உமாசங்கர் வரவேற்றார். இதில் 30 ஆண்டுகளாக யானை தொல்லையால் பேர்ணாம்பட்டு குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். வனவிலங்குகள் விளைநிலத்தில் நுழையாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குடியாத்தம் உழவர் சந்தையில் குடிநீர் வசதி கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்த வேண்டும். சேர்த்து கொண்ட பகுதியில் பெரும்பாலான தன்னை மரங்களில் வெள்ளைப் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது அதனை தடுக்க வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் கே வி குப்பம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் நீர்வளத் துறை ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை தூர்வாரி அதன் கிளை கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேர்ணாம்பட்டு ஏரியில் தனியார் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கப்படுவதால் குடிநீர் மாசடைகிறது. நேரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோர் தானா இடது புற கால்வாயில் இருந்து பாக்கம் ஏரிக்கு செல்லும் கிளை கால்வாய் மேடு பகுதியில் உள்ளதால் தண்ணீர் வராத நிலை உள்ளது எனவே மேடு பகுதியை சமன் செய்து தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
பேர்ணாம்பட்டு உமராபாத் இடையே கால்நடை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும். குடிமராமத்து பணியில் ஏரிகளை மட்டுமே தூர்வாரப்படுகிறது அதனுடன் சேர்த்து வரத்து கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு 13 வாரங்களாக கூலி தராத நிலை உள்ளது. கூலி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோர்தானாவில் இருந்து பெரும்பாடி வழியாக குடியாத்தத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர். விவசாயின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு குடியாத்தம் தலைமை யிடத்து துணை வட்டாட்சியர்கள் மஞ்சுநாதன் சிவசங்கரன் வனத்துறை அலுவலர்கள் வினோபா மாசிலாமணி தோட்டக்கலை அலுவலர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் கேவி குப்பம் பேர்ணாம்பட்டு ஆகிய தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் நெடுமாறன் நன்றி தெரிவித்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment