இந்நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரி பள்ளி மாணவர் மாணவியர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி அபிராமி கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்து முக்கிய சாலை வழியாக ஆர் எஸ் சாலையில் உள்ள பாபு மஹால் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வாணியம்பாடியைச் சேர்ந்த மோகன் குமார் முதல் பரிசாக ரூபாய் 30,000 பெற்றார்.
இரண்டாவது பரிசாக வேலூர் சேர்ந்த சந்தோஷ் குமார் இரண்டாவது பரிசாக ரூபாய் 20 000 பெற்றார், மூன்றாவது பரிசாக வேலூரை சேர்ந்த துரைசாமி ரூபாய் 10,000 பெற்றார். இதேபோல் பெண்கள் பிரிவில் வேலூரை சேர்ந்த சித்ரா முதல் பரிசாக 30-000 பெற்றார். இரண்டாவது பரிசாக வேலூரை சேர்ந்த மகேஸ்வரி 20 000 பெற்றார். மூன்றாவது பரிசாக வேலூரை சேர்ந்த பூமிகா பத்தாயிரம் பெற்றார்.
மேலும் மகளிர் குழுவினருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏசிஎஸ் கல்வி நிறுவனத் தலைவர் ஏ சி சண்முகம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் கேடயமும் சான்றுகளையும் வழங்கினார். மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீ சர்ட் கள் வழங்கப்பட்டன.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment