மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தொடர் காத்திருக்க போராட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 March 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தொடர் காத்திருக்க போராட்டம்.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இரவு பகல் என நாள் முழுவதும் இங்கேயே தங்கிருந்து போராட்டம் நடத்துவது என்ற அடிப்படையில் இரவு உணவினை வளாகத்திலேய சமைத்து சாப்பிட்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ட்டி.டி.ஜோஷி தலைமை தாங்கினார். செயலாளர் வி.ரமேஷ் பொருளாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாநிலத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைபின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.சேகர், ஜாக்டோ செய்தித்தொடர்பாளர் வாரா ஓய்வுபெற்ற ஊழியர் சங்க நிர்வாகி ரவி மாவட்ட நிர்வாகிகள் இளந்தமிழன், புகழரசன், பிரதீப், ஜோதி, வெங்கட்டேசன்  தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.


இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும். வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.


உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் 07.03.2024 அன்று முதல் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் 27.02.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad