வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதியில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று 6-3 2024 காலை 10 30 மணி அளவில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கே வி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் மற்றும் கே எம் ஜி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர், விழிப்புணர்வு ஊர்வலம் நகரில் முக்கிய வீதிகளில் சென்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment