மயான கொள்ளை திருவிழா சம்பந்தமாக ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 7 March 2024

மயான கொள்ளை திருவிழா சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மயான கொள்ளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் சாமி சிலைகளை டிராக்டர் மினி லாரி போன்ற வாகனங்களில் சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் விழாவின்போது சட்டத்திற்கு புறமான செயல்களில் ஈடுபடக் கூடாது மற்றும் மின் திருட்டில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விழாவின் போது கூம்பு வடிவில் உள்ள ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு யாதொரு இடையூறும் குந்தகம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் பிற மதத்தைச் சார்ந்த கோயில்கள் சர்ச்சுகள் மசூதிகள் போன்ற இடங்களில் அதிக அளவில் ஒலி தரும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை மற்றும் பட்டாசுகளை பயன்படுத்தக்கூடாது. என்றும் குறித்த நேரத்தில் சாமி ஊர்வலம் சென்று மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வட்டாட்சியர்கள் குடியாத்தம் சித்ராதேவி கே வி குப்பம் சந்தோஷ் பேர்ணாம்பட்டு விநாயகமூர்த்தி வருவாய் ஆய்வாளர் பலராம் பாஸ்கர் மற்றும் விழா குழுவினர்கள் துரைசாமி நாட்டார் கோவிந்தசாமி நாடார் சின்ன சாமியார் குமார் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad