காட்பாடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 March 2024

காட்பாடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.


வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டம், காட்பாடி, விருதம்பட்டு, மற்றும் திருவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காட்பாடி இரயில்வே நிலையம் சந்திப்பு, ஆகிய இடங்களில் பார்க்கிங்கில் விடாமல் தனித்து விடப்படும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த முத்துசெல்வம் (வயது/40 ) கைது.

த/பெ கிருஷ்ணன், பொன்னை கூட்ரோடு, திருவலம், காட்பாடி தாலுக்கா என்ற நபரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரிலும், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் அவர்களின் வழிகாட்டுதல் பேரிலும், காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் அவர்களின் தலைமையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் உட்பட்ட தனிப்படையினர் மேற்கண்ட எதிரியை இன்று 05.03.2024 தேதி 12.30 மணிக்கு திருவலம் EB கூட்ரோடு அருகே கைது செய்தனர் .


மேற்படி எதிரியிடமிருந்து ரூ.10,00,000/- மதிப்பிலான 15 இருசக்கர வாகனங்கள் மீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, எதிரியை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad