ரூ, 11 லட்சம் மதிப்பில்லான பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 12 March 2024

ரூ, 11 லட்சம் மதிப்பில்லான பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலை அசோக் நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 11 லட்சம் மதிப்பில்லான பயணியர் நிழற் கூடம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர மன்ற உறுப்பினருமான ம மனோஜ் தலைமை தாங்கினார், குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் முன்னில வகித்தனர். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்  D M கதிர் ஆனந்த்  நிழற் கூடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.


இதேபோல் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் 11 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற் கூடத்தை திறந்து வைத்தார், இந்நிகழ்ச்சியில் நகராவைத் தலைவர் கா கோ நெடுஞ்செழியன் வசந்தா ஆறுமுகம் தா பாரி பெரிய கோடீஸ்வரன், நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் என் கோவிந்தராஜ் சி என் பாபு கவிதா பாபு நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் ஒன்றிய செயலாளர், கள்ளுா் ரவி ஒன்றிய கவுன்சிலர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மாற்றித்திறனாளியின் கோரிக்கை ஏற்று மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad