வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேல்ழகன் தலைமையில் தமிழகம் போதை போதைப் பொருள்களின் தலைநகரமாக மாறி வருங்கால தலைமுறைகளின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும் போதை பொருள்கள் கடத்தல் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டதற்கும் காரணமாக விடியா திமுக அரசை கண்டித்தும் போதை பொருட்கள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி வரவேற்புரை ஆற்றினார், கழக அமைப்புச் செயலாளர் வி இராமு மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம், மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் டி சிவா எஸ் எல் எஸ் வனராஜ், கே எம் ஐ சீனிவாசன் ஆகியோர் மனித சங்கிலி போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி எஸ் ஐ அம்ர் பாஷா பி எச் இமகிரி பாபு எஸ் எஸ் ரமேஷ்குமார் ஆர் கே அன்பு ஏ. ரவிச்சந்திரன் அமுதா கருணாநிதி ஆர் கே மகாலிங்கம் எஸ்டி மோகன்ராஜ் ஜி தேவராஜ் கொண்டசமுத்திர ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் எம் ரேவதி மோகன் சிட்டிபாபு ஏ தண்டபாணி மற்றும் வட்ட செயலாளர் பிற அணி செயலாளர் மேலைவை பிரதிநிதிகள் நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment