உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு இலவச தையல் பயிற்சி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 March 2024

உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு இலவச தையல் பயிற்சி.


வேலூர் மாவட்டம் காட்பாடி உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு காட்பாடியில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டது. காட்பாடி லயன் சங்கம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், சேவகன் டிரஸ்ட் மற்றும் தீபம் பெண்கள் கூட்டமைப்பு உடன் இணைந்து  உலக மகளிர் தின விழா காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மண்டபத்தில் நடைபெற்றது. 

சேவகன் டிரஸ்ட்  இயக்குனர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையேற்று   புதிய தையல் பயிற்சியினை துவக்கி வைத்து பேசினார். சேவைகளை பாராட்டி, உலக மகளிர் தினத்தினை போற்றியும், ரெட் கிராஸ் சொசைட்டி காட்பாடி அவைத்தலைவர். செ.நா.ஜனார்த்தனன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பேசினார். பன்னாட்டு லயன் சங்க 324 மாவட்ட ஆளுநர் லயன்.சி. புவனேஸ்வரி அவர்களுக்கும் தீபம் பெண்கள் கூட்டமைப்பின்  தலைவர் ஹேமலதா, செயலாளர் எம்.ஈஸ்வரி, பொருளாளர் டி.லிடியாசாந்தகுமாரி பி.சுமித்ரா உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. 


முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் விருது பெற்ற  காட்டுப்புத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே. விஸ்வநாதன். தமிழ்நாடு அறிவுப்படை இயக்குனர் அம்மையப்பன் காட்பாடி லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் லயன்.என்.தங்கவேல் தலைவர்.எம்.திலகர், மற்றும் லயன்.செல்வமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

 

தீபம் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பூச்சரம், தோழி பெண் தொழிலாளர் நல வாரிய மற்றும் கட்டுமான நலவாரிய மகளிர் குழுவினர் பி.சுமித்ரா பி.வாசுகி, டி.சுமித்ரா, கவிதா, எமிமா, எ.கௌரி, எஸ்.ஷகிலாபி, சி.வேண்டாமணி, உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.விழாவில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும், சால்வை அணிவித்து,  இனிப்பு காரம், தேநீர் மாவட்ட தலைவர் என். தங்கவேல் வழங்கினார்கள். 


இவ்விழாவில் 50 பெண்கள் இலவச தையல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  விழாவில் விழாவில் ஐந்து தையல் மிஷின்கள் இயக்கி பயிற்சி துவக்கப்பட்டது. திருமதி எம்.ஈஸ்வரி  அனைவருக்கும் நன்றி கூறினார். 


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad